15 - வ.உ.சிதம்பரம் பிள்ளை (வ உ சி)
வ.உ.சி. என்று அறியப்படும்.. வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம்.ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் சைவ வெள்ளாளர் மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் . வ. உ. சி. யின் திருமணம் 1895 ஆம் ஆண்டு வள்ளி அம்மையார் உடன் நடைபெற்றது. வள்ளி அம்மையார் 1900 ஆம் ஆண்டு தலை பிரசவத்தில் இறந்து விட்டார். பின்னர் வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது. வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்...