9 - பூண்டி அரங்கநாத முதலியார்அரங்கநாத முதலியார் 1837ஆம்  பூண்டியில் பிறந்தார்.எனவே பூண்டி அரங்கநாத முதலியார் என அழைக்கப்பட்டார்.


கணிதத்தில் கலை முதுவர் பட்டம் (Master of Arts in Mathematics) பெற்றார்.

பெல்லாரி மாவட்டப் பள்ளி (Bellary Provincial School), கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் கணிதப் பேராசிரியராகவும் சென்னை மாகாண நிர்வாகத்தால் ஏற்பளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

உ.வே சா அவர்கள், தனது பல நூல்கள் பதிப்பித்து வர அரங்கநாத முதலியார், பல விதங்களிலும் உதவியதாக தனது "என் சரித்திரம்" என்ற நூலில் கூறியுள்ளார்.

இவர் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.

ஒருமுறை நீதிபதி முத்துசாமி ஐயர் ,இவரைப் பார்த்த போது தன்னிடமிருந்த  தடியைக் கையில் தொங்கவிட்ட படியே, "அடியேன் வணக்கம்" என்று அரங்கநாதருக்கு வணக்கம் சொன்னாராம்.

பதிலுக்கு முதலியார், கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னதோடு."அடியேன் எனில் கையில் தடி எதற்கு?" என்றாராம்.

இதைக்கேட்ட முத்துசாமி ஐயர் உட்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தார்களாம். 

ஆங்கில அரசாங்கத்திடம் திவான் பகதூர் பட்டம் பெற்றவர்.


கச்சிக் கல்மபகம் எனும் நூலினை இயற்றினார்

1893ஆம் ஆண்டு மறைந்தார்.


Comments

Popular posts from this blog

13 - செய்குத்தம்பி பாவலர்

1 - சிவஞான முனிவர்

15 - வ.உ.சிதம்பரம் பிள்ளை (வ உ சி)