Posts

Showing posts from April, 2020

2 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Image
திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள், சிதம்பரம் பிள்ளை-அன்னத்தாச்சி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்தார். தமிழ்ப் புலவரான தந்தைதந்தையிடமே தமிழ் கற்றார்.பின் சென்னைக்கு வந்து காஞ்சிபுரம் மகா வித்வான் சபாபதி முதலியார்,அம்பலவாண ட்ஹேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி கற்று ,புலமைப் பெற்றார் அற நூல்கள்,காப்பியங்கள்,சித்தாந்த சாத்திரங்கள்,பேருரைகள்,சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றார்.நினைவாற்றல் மிக்கவராய்த் திகழ்ந்தார்.சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றலையும் பெற்றார். திருவாவடுதுறை ஆதினத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு "மகாவித்வான்" என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார்.திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார்.சீர்காழியில் முன்சீபாகப் பணியாற்றிய தமிழ் முதல் புதினமான "பிரதாப முதலியார்" சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக,அவரைப் பாராட்டி "குளத்துக்கோவை" எனும் நூலை இயற்றினார். சிற

1 - சிவஞான முனிவர்

Image
பக்தியையும் பழந்தமிழையும் வளர்த்து வான்புகழ் கொண்ட சிறப்புக்குரியவர் சிவஞான சுவாமிகள் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமிகு சிற்றூர் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் சிவனிடத்து நீங்கா அன்பு கொண்டு வாழ்ந்தவர்கள் ஆனந்தக்கூத்தர் மயிலம்மையார். இவ்விருவரும் செய்த தவத்தின் பயனால் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனுக்கு ‘முக்காளலிங்கர்’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முக்காளலிங்கருக்கு ஐந்து வயது நிரம்பியது. அவன் தந்தை அவனைப் பள்ளியில் சேர்த்தார். ஒரு நாள் பள்ளி சென்று இல்லம் திரும்பினான் சிறுவன். வருகின்ற வழியில் காவியுடை அணிந்த சுவாமிகள் சிலர் வருவதைக் கண்டான். அப்போது மிகுந்த அன்புடன் அவர்களை வணங்கி, பணிவுடன் ‘சுவாமிகள் அனைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்து உணவு உண்டு விட்டு செல்ல வேண்டும்’ என்று வேண்டி நின்றான். அச்சுவாமிகள் அனைவரும் சிறுவனின் குணத்தைப் பாராட்டி, இல்லத்துக்கு வர இசைந்தனர். வீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் ச