4 - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)


இராமலிங்க அடிகள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 1823ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள் பிறந்தார். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை.
இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,
என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட மகாவித்வான் சபாபதி முதலியார் விக்கித்து நின்றார்.மெய் மறந்து கண்ணீர் விட்டார்.

இராமலிங்க சுவாமிகள் அவரின் அண்ணன் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.

இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்
--------------------------------------------

  1. அருளாசிரியர்
  2. இதழாசிரியர்
  3. இறையன்பர்
  4. உரையாசிரியர்
  5. சமூக சீர்திருத்தவாதி
  6. சித்தமருத்துவர்
  7. சிறந்த சொற்பொழிவாளர்
  8. ஞானாசிரியர்
  9. தீர்க்கதரிசி
  10. நூலாசிரியர்
  11. பசிப் பிணி போக்கிய அருளாளர்
  12. பதிப்பாசிரியர்
  13. போதகாசிரியர்
  14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
  15. பண்பாளர்

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகைய உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

இவரின் கொள்கைகள்
------------------------------------

  1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
  2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்
  3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது
  4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
  5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால்பலி இடுதலும் கூடாது
  6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
  7. புலால் உணவு உண்ணக்கூடாது
  8. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
  9. சாதி,மதம், இனம்,மொழி முதலிய வேறுபாடு கூடாது
  10. மத வெறி கூடாது

வளரும் குழந்தைகளுக்கு அவர் அறிவுரைகள்
  1. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
  2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
  3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
  4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
  5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
  6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
  7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
  8. குருவை வணங்கக் கூசி நிற்காதே
  9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
  10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே

இவர் பதிப்பித்தவை
-----------------------------
  1. சின்மய தீபிகை
  2. ஒழிவிலொடுக்கம்
  3. தொண்டைமண்டல சதகம்

இவர் இயற்றியவை
---------------------------

  1. மனுமுறை கண்ட வாசகம்
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம்

திருவருட்பா
--------------------------

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.

கண்டன நூல்கள்

வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய சைவவாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுத்துக்களையும் புறம் தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர்.

1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்க ஆரம்பித்தது. 1869 இல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது; இது அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.

1904 இல் நா.கதிரைவேற்பிள்ளைவள்ளலாருக்கு எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக ம.தி.பானுகவி என்பவர், 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்

இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது,

இராமலிங்க அடிகளின் பாடல்கள் அனைத்தும் தேவை இல்லாத சமயக் கோட்பாடுகளை கேள்வி கேட்டது.
சாதி சமய கோட்பாடுகளை.மத வேறுபாடுகளை களைய அவர் இயற்றியப் பாடல்கள் பலரின் கவனத்தைப் பெற, சாதி சமய மதங்களில் ஊறிய மனங்கள் அதை எதிர்த்தன.
சைவ சமய மரபியல் சிந்தனைகளை அவர் உடைத்தெறிவதாகக் கூறி சைவ சமய அடிப்படைவாதிகள் அவரோடு சண்டையிட்டனர். வாதம் செய்தனர்.அதில் குறிப்பிடத்தக்கவர் ஆறுமுக நாவலர்.
வள்ளலார் மீது மட்டுமின்றி, சைவ சமய விதிகளைச் சரிவரப் பின்பற்றாத சைவர்கள் அனைவர் மீதும் ஆறுமுக நாவலர் கடுங்கோபம் கொண்டார். அதனால்தான் “நாவலர்” என்னும் பெயரைத் திருவாவடுதுறை ஆதினம் அவருக்கு வழங்கிற்று

நாவலர்,சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.
ஆனால் அந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் "திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

1874ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் அமரர் ஆனார்.



Comments

Popular posts from this blog

8 - மறைமலை அடிகள்

1 - சிவஞான முனிவர்

13 - செய்குத்தம்பி பாவலர்