3 - ஆறுமுக நாவலர்



1822ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் நாள் கந்தப்பிள்ளை,சிவகாமி அம்மையார் தம் பதிகளுக்குப் பிறந்தவர் ஆறுமுக நாவலர. நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை.

தனது ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய  முதலியாரிடம் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆஅங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19வது வயதில்(1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார்.

ஓலைச்சுவடியில் இருந்த தமிழ், கரையான்களாலும் செல்களாலும் அழிவதைக் கண்டு மனம் வருத்தப்பட்ட ஆறுமுக நாவலர், அதைப் பதிப்பிக்கும் பணியில் களமிறங்கினார். ஓலைச்சுவடியில் இருந்த தமிழை அப்படியே பதிப்பிக்காமல், அதனைப் பல பிரதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பிறகே பதிப்பித்தார். அவர் பதிப்பித்த நூல்களில் அனைத்தும் அதாவது, பக்க எண்கள்கூடத் தமிழ் எண்களாகவே இருக்கும். அதுபோல, பதிப்பித்த ஆண்டும் மாதமும் தமிழிலேயே இருக்கும். இப்படி அவர் பதிப்பித்த நூல்கள் 46. எழுதிய நூல்கள் 24.

தமிழுக்காகத் தம் இறுதிமூச்சுவரை வாழ்ந்த ஆறுமுக நாவலர், “கல்வியை விரும்பும் ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியம்” என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ‘புத்தகம்’  என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், “கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்களுக்கும், கல்வியிலே நன்கு தேர்ச்சியடைந்த ஆசிரியர்களுக்கும், இனி கற்க முயல்பவர்களுமாகிய எல்லாருக்கும் புத்தகங்கள் இன்றியமையாதவை. புத்தகங்கள் இன்றிக் கற்கப் புகுவோர் கோலின்றி நடக்கக் கருதிய குருடர்போல் ஆவர். யாதாயினும் ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அதனைச் செய்வதற்குரிய ஆயுதம் இன்றியமையாததுபோல, கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதனைக் கற்றலுக்குரிய புத்தகம் இன்றியமையாததேயாகும். ஆதலால், கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்கள் புத்தகங்களைச் சம்பாதித்து, அவற்றைக் கிழிக்காமலும் அழுக்குப் படியாமலும், கெட்டுப் போகாமலும் பாதுகாத்து வைத்துப் படித்தல் வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். 

“தமிழும் சைவமும் என் இரண்டு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன்கொள்வதே என் கடன்; அவை வாழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லி அதன்வழி வாழ்ந்தவர் இவர்.

மேலும் தமிழில் பேசி ஆங்கிலேய நீதிபதியைத் திணறடித்தவர் ஆறுமுக நாவலர்! 

தமிழ் மட்டுமல்லாது அன்றையக் காலத்திலேயே நன்கு ஆங்கிலப் புலமை பெற்றிருந்த ஆறுமுக நாவலர், ஒருமுறை சென்னைக் கடற்கரையில் நடந்து சென்றபோது, அருகிலிருந்த குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இந்த வழக்குச் சம்பந்தமாக சாட்சியம் அளிக்க வேண்டித் தன் சீடர்களுடன் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். அங்கு நீதிபதியிடம், தன் தரப்பு விஷயங்களை ஆறுமுக நாவலர் ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பித்தார். இவர் ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு பொறாமைப்பட்ட அந்த ஆங்கிலேய நீதிபதி... ஆறுமுக நாவலரிடம், “நீங்கள் தமிழிலேயே சொல்லுங்கள்; அதை, நீதிமன்ற அதிகாரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவார்” என்று உத்தரவிட்டார்.

“வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்தான்”  என்பதை 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ நூலில் தெளிவுப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அந்த நூலில், “மதுபானம் மூலம் ஆங்கிலேயருக்கு ஆண்டுக்குப் பல லட்ச ரூபாய் வருமானம் வருகிறது.சாராயத்தை ஒழிப்பாளர்கள் ஆபால் இலங்கை மக்கள் செல்வமும் ஆரோக்கியமும் அடைவார்கள்” என்று மதுவுக்கு எதிராக அன்றே குரல்கொடுத்துள்ளார்

1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் நாள் அமரர் ஆனார்.

ஆறுமுக நாவலர் எழுதிய அல்லது பதிப்பித்த நூல்பட்டியல். 

  1. அகத்தியர் அருளிய தேவாரத் திரட்டு
  2. அன்னம்பட்டியம்
  3. இலக்கணக் கொத்து
  4. இலக்கணச் சுருக்கம்
  5. இலக்கண விளக்கச் சூறாவளி
  6. இலக்கண வினா விடை
  7. இலங்கை பூமி சாஸ்த்திரம்
  8. ஏரெழுபது
  9. கந்தபுராண வசனம்
  10. கந்தபுராணம் பகுதி 1-2
  11. கொலை மறுத்தல்
  12. கோயிற் புராணம் (புதிய உரை)
  13. சிதம்பரமான்மியம்
  14. சிவஞானபோதமும் வார்த்திகமென்னும் பொழிப்புரையும்
  15. சிவஞானபோத சிற்றுரை
  16. சிவராத்திரி புராணம்
  17. சிவசேத்திராலய மஹாத்ஸவ உண்மைவிளக்கம்
  18. சிவாலய தரிசனவிதி
  19. சுப்பிரமணிய போதகம்
  20. சூடாமணி நிகண்டு மூலம்-உரை
  21. சேது புராணம்
  22. சைவ சமயநெறி
  23. சைவ தூஷண பரிகாரம்
  24. சைவ வினா விடை
  25. சௌந்தர்யலகரி உரை
  26. ஞானக்கும்மி
  27. தருக்க சங்கிரகம்
  28. தருக்க சங்கிரக தீபிகை
  29. தனிப்பா மாலை
  30. தாயுமானசுவாமிகள் திருப்பாடல் திரட்டு
  31. திருக்குறள் மூலம் பரிமேலழகர் உரை
  32. திருக்கை வழக்கம்
  33. திருக்கோவையார் மூலம்
  34. திருக்கோவையார் நச் உரை
  35. திருச்செந்தூர் நிரோட்டயமக வந்தாதி
  36. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
  37. திருத்தொண்டர் புராணம்
  38. திருமுருகாற்றுப்படை
  39. திருவாசகம் மூலம்
  40. திருவிளையாடற் புராணம் மூலம்
  41. திருவிளையாடற் புராணம் வசனம்
  42. தெய்வயாணையம்மை திருமணப்படலம்
  43. தொல்காப்பியம் சூத்திர விருத்தி
  44. தொல்காப்பியம் சொல். சேனா. உரை
  45. நன்னூல் காண்டிகை உரை
  46. நன்னூல் விருத்தி உரை
  47. நீதி நூல் திரட்டு மூலமும் உரையும்
  48. நைடத உரை
  49. பதினோராம் திருமுறை
  50. பாலபாடம் - 4 தொகுதிகள்
  51. பிரபந்தத் திரட்டு
  52. பிரயோக விவேகம்
  53. புட்ப விதி
  54. பெரிய புராண வசனம்
  55. போலியருட்பா மறுப்பு
  56. மார்க்கண்டேயர்
  57. யாழ்ப்பாணச் சமயநிலை
  58. வக்கிரதண்டம்
  59. வாக்குண்டாம்
  60. விநாயக கவசம்

Comments

Popular posts from this blog

8 - மறைமலை அடிகள்

1 - சிவஞான முனிவர்

4 - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)