2 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள், சிதம்பரம் பிள்ளை-அன்னத்தாச்சி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்தார். தமிழ்ப் புலவரான தந்தைதந்தையிடமே தமிழ் கற்றார்.பின் சென்னைக்கு வந்து காஞ்சிபுரம் மகா வித்வான் சபாபதி முதலியார்,அம்பலவாண ட்ஹேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி கற்று ,புலமைப் பெற்றார் அற நூல்கள்,காப்பியங்கள்,சித்தாந்த சாத்திரங்கள்,பேருரைகள்,சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றார்.நினைவாற்றல் மிக்கவராய்த் திகழ்ந்தார்.சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றலையும் பெற்றார். திருவாவடுதுறை ஆதினத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு "மகாவித்வான்" என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார்.திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார்.சீர்காழியில் முன்சீபாகப் பணியாற்றிய தமிழ் முதல் புதினமான "பிரதாப முதலியார்" சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக,அவரைப் பாராட்டி "குளத்துக்கோவை" எனும் நூலை இயற்றினார். சிற...